பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ! - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 10, 2024

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் !

சீரற்ற காலநிலையினால் தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளுக்கு முகங்கொடுக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

பதுளையில் இருந்து பண்டாரவளை நோக்கி பயணிக்க சிரமப்படும் பரீட்சார்த்திகள் பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணிக்க சிரமப்படும் பரீட்சார்த்திகள் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, ஆரம்பமான உயர்தரப் பரீட்சை பாதுகாப்பு கடமையில் 8,486 காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 2,298 பரீட்சை நிலையங்களில் கடந்த (4) ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சை இம்மாதம் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment