முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய சடலம் : கேன்களில் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, January 19, 2024

முல்லைத்தீவில் கரை ஒதுங்கிய சடலம் : கேன்களில் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் சடலம் இன்று (19) கரையோதுங்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையில் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கின்றது.

இதில் உள்ள கேன்களில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.

குறித்த சடலம் கரையோதுங்கியுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சடலத்தினை மீட்பதற்காக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நீதிபதியை அழைத்துச் சென்று மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, இராணுவத்தினரின் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

No comments:

Post a Comment