பத்து மாதங்களாக கட்டணம் செலுத்தாத ஏழு இலட்சம் பாவனையாளர்களின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மின் கட்டணங்கள் அதிகரிப்பு, வரி உயர்வு, மற்றும் ரூபாவின் பெறுமதிகளில் ஏற்பட்ட வீழ்ச்சிகளால் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளதை காரணமாகக் காட்டியே, இவர்கள் மின் கட்டணங்களை செலுத்தாதிருந்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதத்திலேயே, அதிகளவான மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20,474 ஆகும். ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 481 நுகர்வோரின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதேவேளை, ஒரு இலட்சத்து 6106 பாவனையாளர்களின் மின் விநியோகங்கள் ஒக்டோபரில் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment