அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அடுத்த வாரமளவில் இறக்குமதி : 54 வகையான மருந்துகளை தர பங்களாதேஷ் இணக்கம் - ரமேஷ் பத்திரன - News View

About Us

About Us

Breaking

Monday, November 6, 2023

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அடுத்த வாரமளவில் இறக்குமதி : 54 வகையான மருந்துகளை தர பங்களாதேஷ் இணக்கம் - ரமேஷ் பத்திரன

புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கான மருந்துகள் உள்ளிட்ட 54 வகையான அத்தியாவசிய மருந்துகள் அடுத்த வாரத்திற்குள் கிடைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 58 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து பொருட்களும் விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உதவிகள், பங்களாதேஷிலிருந்து நாட்டுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் மற்றும் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், இவ்விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன. 

நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், பங்களாதேஷ் அரசாங்கத்துடன் நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பதன் அவசியம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment