நிகழ்நிலைக் காப்பு சட்டமூலம் (Online Safety Bill) அல்லது அதன் பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானத்தை இன்றையதினம் (07) பாராளுமன்ற அமர்வின் போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்தார்.
சவாலுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த சட்டமூலத்தின் ஒரு சில சரத்துக்களை திருத்திய பின்னர், பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உயர் நீதிமன்றம் அதன் வியாக்கியானத்தில் அறிவித்துள்ளது.
இதேவேளை, நிகழ்நிலைக்காப்பு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அது இன்னும் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திரத்தில் பதியப்படவில்லை என்பதால் குறித்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக, அஜித் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்
No comments:
Post a Comment