தற்போதைய சீரற்ற காலநிலையினால் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
புத்தளம் பிரதேசங்களிலும் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதுடன், நகரில் டெங்கு நோய் காரணமாக இன்று (16) குழந்தை ஒன்று மரணித்துள்ள செய்தியை நகர சபை நிர்வாகம் மிகுந்த மனவேதனையுடன் அறியத்தருகிறது.
நகர சபை செயலாளர் பிரீத்திகாவின் ஆலோசனைக்கமைய நகர சபை டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது.
எனவே, டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளங் கண்டு அவற்றை அழிப்பதுடன் உங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்து உயிராபத்துக்களைத் தவிர்க்குமாறு நகர சபை நிர்வாகம் பொதுமக்களை வேண்டிக் கொள்கிறது.
மேலும், டெங்கு பரவும் அபாயகரமான சூழலை வைத்திருப்போருக்கெதிராக நகர சபையினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் நகரசபை நிர்வாகம் அறிவித்துள்ளது.
புத்தளம் நிருபர்
No comments:
Post a Comment