இராணுவ முகாமில் காணாமல் போன T56 துப்பாக்கி மீட்பு : எதற்காக திருடினார், குற்றங்கள் புரிந்தாரா என விசாரணை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 12, 2023

இராணுவ முகாமில் காணாமல் போன T56 துப்பாக்கி மீட்பு : எதற்காக திருடினார், குற்றங்கள் புரிந்தாரா என விசாரணை

கரந்தெனிய இராணுவ முகாமில் காணாமல் போன T56 ரக துப்பாக்கி, பட்டபொல பகுதியிலுள்ள இராணுவ சிப்பாய் ஒருவரின் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

சந்தேகநபர் அதே இராணுவ முகாமில் கடமையாற்றும் 39 வயதான பட்டபொல பிரதேசத்தில் வசிக்கும் இராணுவ சிப்பாய் எனவும் அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கரந்தெனிய இராணுவ முகாமில் இருந்து T56 ரக துப்பாக்கி மற்றும் அதற்கான மெகசின்கள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் எதற்காக அதனை கொண்டு சென்றார், காணாமல் போன குறித்த துப்பாக்கியைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றங்களை புரிந்துள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment