கம்பஹா மாவட்டம், பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரண அம்பலம் கடற்கரைக்கு அருகில் உயிரிழந்த நபரின் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு (11) குறித்த தலைப்பாகம் மீட்கப்பட்டதாகவும் அது ஆண் ஒருவரது தலை எனவும் பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.
அவசர அழைப்பு இலக்கமான 119 இற்கு கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பு தகவலைத் தொடர்ந்து மேற்கொண்ட சோதனையின்போது குறித்த தலையை பொலிஸார் மீட்டுள்ளனர்.
உடலிலிருந்து பிரிக்கப்பட்ட தலை கடலில் மிதந்து கரையொதுங்கியதா, இல்லையெனில் எவரேனும் அதனை அங்கு கொண்டு வந்து போட்டார்களா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment