உலக சாதனை படைத்த மீராவோடை அல் ஹிதாயா மாணவன் அன்வர் அப்னான் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 12, 2023

உலக சாதனை படைத்த மீராவோடை அல் ஹிதாயா மாணவன் அன்வர் அப்னான்

எஸ்.எம்.எம்.முர்ஷித்

இந்தியன் இன்சிடியூட் ஒப் சயன்ஸ் ஜூனியர கோட் கிளாஸ் (Indianinstitute of Science Junior Code Clash 2023) உலகலாவிய ரீதியில் Coding சம்பந்தமாக நடாத்திய போட்டியில் கோறளைப்பற்று மேற்கு, கோட்டக் கல்வி பிரிவில் அமைந்துள்ள மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தரம் 09 இல் கல்வி பயிலும் மாணவன் 985 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்று நாட்டிற்கும் தனது பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்னார்.

நேற்று 12.10.2023 இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.00 மணி தொடக்கம் அதிகாலை 02 மணி வரை நடைபெற்ற நிகழ்நிலை பரீட்சையில் உலகத்தின் பல நாடுகளிலிருந்தும் 2,260 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் இலங்கையிலிருந்து 02 மாணவர்கள் மாத்திரமே பங்கு கொண்டனர்.

02 மணித்தியாலங்களில் இப்போட்டியில் வெற்றி கிடைத்தது. என்னுடைய வெற்றிக்காக என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் பெற்றோர்கள், என்னுடைய சகோதரிகளும் நான் கூட எதிர்பார்க்கவில்லை இவ்வெற்றி கிடைக்குமென்று பெருமிதத்துடன் அன்வர் அப்னான் தெரிவித்தார்.

உலகத்திலே அதிக வலம் பொருந்திய நாடுகள் பங்குபற்றியதுடன், அதிலும் தொழிநுட்ப அறிவில் மேலொங்கிக் காணப்படும் நாடுகளிலிருந்து கூட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இறைவன் துணை கொண்டு எனது ஆசான்களின் வழிநடத்தலுடன் எனது பெற்றோரின் கனவுகளை நனவாக்க முடியுமென்று நம்பினேன். அதனை இறைவன் நிறைவேற்றித்தந்தான் என மேலும் தெரிவித்தார்.

அன்வர் அப்னான் தொடர்ச்சியான சாதனைகளை புரிந்து வந்த மாணவன் என்பதுடன், தற்போது உலகின் பார்வையை எமது நாட்டின் மீது திரும்பிப் பார்க்க வைத்துள்ளதுடன், தனது பாடசாலையின் பெயரையும் பெருமைப்படுத்திய இம்மாணவன் மேலும் பல சாதனைகள் புரிய பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துவதாக அதிபர் ஏ.ஜே.மர்சூக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment