கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்நாட்களில் பரீட்சை முடிவுகள் கணினிமயமாக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது தொடர்பில் அவர் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் கடந்த மே மாதம் 3568 மையங்களில் நடைபெற்றது.
இந்நிலையில், கணினி மயமாக்கும் பணி முடிந்தவுடன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment