இன்றிரவு சீனா பயணமாகும் ஜனாதிபதி ரணில் ! பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு ! - News View

About Us

About Us

Breaking

Sunday, October 15, 2023

இன்றிரவு சீனா பயணமாகும் ஜனாதிபதி ரணில் ! பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைப்பு !

சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு (15) சீனா செல்லவுள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் சீனாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ள காலப்பகுதியில் அவருக்கு கீழுள்ள அமைச்சுகளின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, நாளை (16) முதல் இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி சுற்றாடல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment