சிறுநீரக நோயாளர்களின் உயிர்காக்கும் இயந்தியரத்தை பெற்றுக் கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 14, 2023

சிறுநீரக நோயாளர்களின் உயிர்காக்கும் இயந்தியரத்தை பெற்றுக் கொடுத்த ஆளுநர் செந்தில் தொண்டமான்

நூருல் ஹுதா உமர் 

கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் பல இலட்சம் பெறுமதியான இயந்திரங்கள் திருகோணமலை கந்தளாய் வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

LIOC நிறுவனத்தின் தலைவர் தீபக் தாஸிடம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரம் பெறுமதியான இந்த உயிர்க்காக்கும் சிறுநீரக இயந்திரத்தை (Dialysis Machine) பெற்றுக் கொடுத்துள்ளார்.

இயந்திரங்களை கையளிக்கும் நிகழ்வு திருகோணமலை IOC தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன் மூலம் மேற்படி இரண்டு வைத்தியசாலைகளிலும் சிறுநீரக சிகிச்சைகளுக்காக செல்லும் நோயாளர்களின் உயிராபத்துகள் எதிர்காலத்தில் குறைவடையும்.

இலங்கையில் சிறுநீரக நோயாளர் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் செந்தில் தொண்டமானின் முயற்சியால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள இந்த இயந்திரங்கள் உயிரிழப்புகளை குறித்த பிரதேசங்களில் குறைவடை செய்யும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment