எம்.பியானார் அலி ஸாஹிர் மௌலானா - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

எம்.பியானார் அலி ஸாஹிர் மௌலானா

அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (17) காலை அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அலி ஸாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அண்மையில் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.

நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய, நசீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment