மன்னார் தென் கடற் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென் கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாகவும் அத்துடன் அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார் சிலாவத்துறை பகுதி கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும் சிலாவத்துறை கிராமிய மீனவ சமாசத் தலைவர் அனாப்தீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் இன்று (16) அப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக ஆமைகள் கரையில் ஒதுங்கி வருவதுடன் மேலும் அதிகமான ஆமைகள் கடலில் மிதந்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைமன்னார் விஷேட நிருபர் வாஸ் கூஞ்ஞ
No comments:
Post a Comment