“இந்திய வம்சாவளியினர்” எனப் பதிவிடலாம் : கடிதத்தை அனுப்பியது திணைக்களம் ! - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 24, 2023

“இந்திய வம்சாவளியினர்” எனப் பதிவிடலாம் : கடிதத்தை அனுப்பியது திணைக்களம் !

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழில் இனத்தினை இந்திய வம்சாவளியினர் என்பதை நீக்கி பதிவாளர் நாயகத்தால் வெளியிட்ட சுற்றுநிரூபத்த்திற்கு இ.தொ.கா கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.

பதிவாளர் நாயகத்தின் சுற்றுநிரூபத்திற்கு இ.தொ.கா.வின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் இருந்தனர்.

இ.தொ.கா.வின் தொடர் அழுத்தத்தினால் மீண்டும் இந்திய வம்சாவளியினர் என்று பதிவிடலாம் என்ற ஒப்புதல் கடிதத்தை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு எழுத்து மூலம் பதிவாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment