கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர் விநியோகத் தடை - News View

About Us

About Us

Breaking

Friday, October 6, 2023

கொழும்பில் நாளை 15 மணித்தியால நீர் விநியோகத் தடை

நாளை (07) கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 15 மணி நேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி நாளை (07) மாலை 05.00 மணி முதல் மறுநாள் (08) காலை 08.00 மணி வரையிலான காலப்பகுதியில் கொழும்பு கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

அவசர பழுது காரணமாக இந்நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வருத்தம் தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment