வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோ பைடனின் நாய் - News View

About Us

About Us

Breaking

Friday, October 6, 2023

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜோ பைடனின் நாய்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நாய் கமாண்டர் (Commander) வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. 

வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பைடனால் German Shepherd வகை நாய் வளர்க்கப்படுகிறது. 

இது கடந்த வாரம் காவல் அதிகாரி ஒருவரை கடித்ததில் காயமடைந்தார். உடனடியாக அவருக்கு அங்கே மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.

கமாண்டர் என்ற 2 வயதான அந்த நாய் ஜெர்மன் ஷெபர்ட் வகையைச் சேர்ந்ததாகும். அது இப்போது எங்கே உள்ளது என்று தெரியவில்லை.

2021ஆம் ஆண்டில் வெள்ளை மாளிகைக்கு வந்த இந்த கமாண்டர் நாய், 2022 ஒக்டோபரில் தொடங்கி ஜனவரி வரை அமெரிக்க உளவுச் சேவைப் பிரிவில் பணியாற்றும் 11 அதிகாரிகளைக் கடித்துள்ளது. 

அதனிடம் கடி வாங்கிய ஊழியர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று சி.என்.என் செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஏனெனில் நாய் வெள்ளை மாளிகையின் மற்ற ஊழியர்களையும் கடித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியும் அவரது மனைவியும் ஊழியர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள் என்று அவர்களின் பேச்சாளர் எலிசபெத் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

கமாண்டர் கடைசியாக கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளை மாளிகையில் காணப்பட்டது.

முன்னதாக, வெள்ளை மாளிகையில் பணிபுரிவோரிடம் ஆக்ரோஷமாக இருந்த காரணத்தால், மேஜர் என்ற நாய் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வெள்ளை மாளிகை பாதுகாவலர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கமாண்டர் நாயை மாளிகையைவிட்டு வெளியேற்றியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடனின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment