இணையம் ஊடான மோசடிகள் அதிகரிப்பு : தனிப்பட்ட தரவுகளை வௌியிட வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Friday, September 22, 2023

இணையம் ஊடான மோசடிகள் அதிகரிப்பு : தனிப்பட்ட தரவுகளை வௌியிட வேண்டாம்

இணையம் ஊடாக இடம்பெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதத்தில் மாத்திரம் இவ்வாறான 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல குறிப்பிட்டார்.

தொழில் பெற்றுத் தருவதாகக் குறிப்பிட்டு சட்டவிரோதமான முறையில் அடையாள அட்டை, பிறப்புச்சான்றிதழ், கடவுச்சீட்டுகளின் பிரதிகள் மோசடிக்காரர்களினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொதிகள், பரிசில்கள் தங்களிடம் உள்ளதாகவும், அதனை பெற்றுக் கொள்ளுமாறு குறுஞ் செய்திகளை அனுப்பி நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் மிகவும் பாதுகாப்பாக செயற்படுமாறும், தனிப்பட்ட தரவுகளை வௌியிட வேண்டாமெனவும் பொதுமக்களை கேட்டுக் கொள்வதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷருக்க தமுனுபொல அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment