மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை : பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 23, 2023

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை : பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

தனது சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்ற நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர் தொடர்பான தகவல்களை தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 வயதான மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரான தந்தையின் புகைப்படத்தை மாவத்தகம பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் 942913940V என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்குரிய 29 வயதுடையவர் எனவும் மிரிஸ்ஸ படல்கே கிஹான் தனுஷ்க எனவும் இலக்கம் 95/02, பிரியந்தி நிவாச, பபுராவ, வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் மாவத்தகம பொலிஸ் பொறுப்பதிகாரியிடமோ அல்லது 0372299222, 0718591258 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ உடனடியாக தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரியின் 071859702 என்ற தொலைபேசி இலக்கத்துக்கும் தகவல் வழங்க முடியுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment