பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, September 13, 2023

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

ஜனாதிபதி வெளிநாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக பதில் அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதற்கமைய ஜனாதிபதி நாடு திரும்பும் வரையான காலப்பகுதி வரை அமுலாகும் வகையில் இவர்கள் பதில் அமைச்சர்களாக கடமையாற்றுவார்கள்.

1. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான பிரமித்த பண்டார தென்னகோன், பாதுகாப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

2. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி மற்றும் பொருளாதர நிலைப்படுத்தல், தேசிய கொள்கைகள் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

3. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தொழில்நுட்ப பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

4. சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், சிறுவர், மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்

“G77 குழு - சீனா” அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் அவர், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு பயணமாகவுள்ளார்.

No comments:

Post a Comment