“G77 + சீனா அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) காலை கியூபா பயணமாகியுள்ளார்.
“தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் “G77 மற்றும் சீனா” அரச தலைவர்கள் மாநாடு (G77+China Leaders’ Summit) 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ளது.
கியூபா ஜனாதிபதி மிகயெல் டயஸ்-கனெலின் (Miguel Diaz-Canel) உத்தியோகபூர்வ அழைப்பையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க G77 + சீனா அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இந்த அரச தலைவர் உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கை மற்றும் கியூபா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சு வார்த்தையும் நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment