தாமரை கோபுரத்தில் பெயரை பொறித்த பெண்கள் : எச்சரித்து விடுவித்த பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 10, 2023

தாமரை கோபுரத்தில் பெயரை பொறித்த பெண்கள் : எச்சரித்து விடுவித்த பொலிஸார்

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் தமது பெயர்களையும், வாக்கியங்களையும் பொறித்த சில பெண்களுக்கு பொலிஸாரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த சில பெண்கள், கோபுர சுற்று தளத்தில் வாக்கியங்களையும் பெயரையும் எழுதிக் கொண்டிருந்ததை நிர்வாகம் அவதானித்துள்ளது.

அவர்கள் எழுதிக் கொண்டிருந்தவை அங்குள்ள CCTV காட்சிகளிலும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், குறித்த குழுவினர் தொடர்பில் மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, அக்குழுவினர் நேற்று (09) பிற்பகல் அங்கு வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பரிதாபகரமானது என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“இந்த பொதுச் சொத்தை பாதுகாப்பது நமது கடமையாகும். இருப்பினும், தாமரை கோபுரத்தின் சுவர்கள் மற்றும் இரும்பு வேலிகளை சேதப்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,” என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment