குடும்பப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு : சமுர்த்தி உத்தியோகத்தர் கைது - News View

About Us

About Us

Breaking

Monday, August 7, 2023

குடும்பப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு : சமுர்த்தி உத்தியோகத்தர் கைது

பாறுக் ஷிஹான்

ஆணுறுப்பை வட்ஸ்அப் செயலியினூடாக குடும்பப் பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாகக்கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியொன்றில் வசிக்கின்ற இரண்டு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண்ணிடம் பல சலுகைகளைப் பெற்றுத்தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது ஆணுறுப்பினை புகைப்படம் எடுத்து குடும்பப் பெண்ணின் வட்ஸ்அப் செயலியினூடாக குடும்ப பெண்ணின் கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் சேட்டை செய்து வந்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடு நேற்று (7) கிடைக்கப் பெற்றிருந்தது.

இதற்கமைய சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எம். ஐயூப் தலைமையிலான பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேகநபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரைக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பல்வேறு திருமணங்கள் செய்துள்ளதுடன், இவ்வாறு பல்வேறு கணவனற்ற பெண்கள் மற்றும் தனிமையிலுள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளைக்கூறி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

கைதான சந்தேகநபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment