இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்திப்பது தவறு - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 30, 2023

இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்திப்பது தவறு - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

நாட்டில் எந்தவொரு பிரதேசத்திலும் அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீடுகளை மேற்கொள்வதற்கு சகல நாடுகளுக்கும் வாய்ப்பளிக்கப்படும். அந்த அடிப்படையிலேயே திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. எனவே இவ்விடயத்தில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்திப்பது தவறாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்றபோது அவர் இதனை தெரிவித்தார் .

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்குள் நடைமுறை சாத்தியதமான வழிமுறைகள் எவையும் இல்லை. நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்காவிட்டால் இலங்கையை என்றுமே கட்டியெழுப்ப முடியாது.

இவ்வாண்டுக்குள் கடன் மறுசீரமைப்புக்களை நிறைவு செய்தால், அடுத்த வருடத்தில் அபிவிருத்தி திட்டங்களை மீளத் தொடங்குவதற்கான கடனுதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கு எந்த நாடுகள் முன்வந்தாலும் அவற்றுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா என்று பாகுபாட்டுடன் சிந்தித்தால் அது தவறாகும். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் எவ்வாறு செயற்படுகின்றன என்பதை நன்கு அவதானிக்க வேண்டும்.

இவ்வனைத்து நாடுகளும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதன் ஊடாகவே அசுர வேகத்தில் அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கின்றன. அதன் அடிப்படையிலேயே திருகோணமலையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மாத்திரமின்றி இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும், வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதே எமது இலக்காகும். அதற்கு வாய்ப்பளிக்காவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது.

No comments:

Post a Comment