இலங்கையில் தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொறட்டுவையில் 51 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 14 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் அடங்குவதாக மொறட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி மஞ்சுள திலகரத்ன தெரிவித்தார்.
COVID-19 தொற்று காலத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குடும்ப அங்கத்தவர்கள் இடையே தொழுநோய் பரவும் அபாயம் அதிகரித்ததாக வைத்திய அதிகாரி மஞ்சுளா திலகரத்ன தெரிவித்துள்ளார்.
தொழுநோய்க்குரிய பக்டீரியாக்கள் உடலில் தொற்றி 3 அல்லது 5 வருடங்களின் பின்னரே அறிகுறிகள் தென்படும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment