நூருல் ஹுதா உமர்
கடந்த காலங்களில் அதிகளவான இளைஞர்கள் பள்ளிவாசலுக்கு வருகை தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பெற்றோர்களுடன் இணைந்து மேற்கொண்டோம் என அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம் சபீஸ் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இன்று (06) திறந்து வைக்கப்பட்டபோது கருத்து தெரிவிக்கைலேயே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், இன்றைய இளைஞர்கள் பள்ளிவாசலில் தொழாமல் இங்கு நடைபெறும் திக்ருகளை நாவினால் மொழியாமல், பாயான்களை (மார்க்க விடயங்களை) காது கொடுத்து கேட்காமல் நல்ல சமூதாயத்தை உருவாக்கிவிட முடியாது.
அதேபோன்று சிறு வயது முதல் குழந்தைகளை பள்ளிவாசலோடு இணைக்கக் கூடிய விதத்தில் இந்த பூங்கா உருவாக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இப்பூங்கா அமைந்திட ஒத்துழைப்பு வழங்கிய ஜமாஅத்தினர் அதேபோன்று நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment