அமைச்சர் நஷீர் அஹமட் அப்பலோ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றாடல் அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நஷீர் அஹமட் தனது வழமையான மருத்துவ பரிசோதனையினை மேற்கொண்டிருந்தவேளை இதயக் குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு வைத்தியர்களால் கண்டறியப்பட்டு உடனடியாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளுமாறு வைத்தியர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வைத்தியர்களால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக, இந்தியா சென்ற அமைச்சர் சென்னையில் உள்ள அப்பலோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையினை தொடர்ந்து வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் முஸ்லிம்களது காணிப் பிரச்சனைகள் தொடர்பில் தனது நிலைப்பாட்டை முஸ்லிம் சமூகத்தின் சார்பிலே வெளிப்படையாகவும், தைரியமாகவும் தெரிவித்துவரும் நிலையில் தற்போது சென்னையில் உள்ள அப்பலோ தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமைச்சர் நஷீர் அஹமட்டின், விரைவான உடல் நலத்திற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், அவரது அரசியல், சமூகப் பணிகள் இன்னும் வீரியத்துடன் முன்னெடுக்கப்படவும் உளமாறப் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment