சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1 - News View

About Us

About Us

Breaking

Monday, August 28, 2023

சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1

சூரியனின் ரகசியங்களை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஐ செப்டம்பர் 2 ஆம் திகதி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்திரயான்-3 இன் வெற்றி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (ISRO) உற்சாகத்தை அதிகரித்துள்ளது. 

இந்தியாவின் எதிர்கால நோக்கங்கள் இப்போது நிலவுக்கு அப்பால் விரிவடைந்துள்ளன. எனினும், இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.

சூரியனின் ரகசியங்களை அறிய இந்திய விஞ்ஞானிகள் தற்போது தயாராகி வருகின்றனர். இதற்காக இஸ்ரோ விரைவில் ஆதித்யா எல்-1 (ADITYA-L1) செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது. 

சூரியனின் ரகசியங்களை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 ஐ செப்டம்பர் 2 ஆம் திகதி அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜனவரி மாதம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனுக்கு ஏவப்பட உள்ளது.

இந்த விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் கொண்ட சூரியனின் ”லெக்ராஞ்சியன் புள்ளி 1 இல் நிலைநிறுத்தப்பட உள்ளது. 

இந்த விண்கலம் மூலம் சூரிய புயல்கள், பூமியில் ஏற்படும் மாற்றங்கள், ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை பெற முடியும்.

மேலும் சூரியனுடைய வெளி அடுக்கு மற்றும் அருகாமை புற ஊதாக்கதிர்களை ஆய்வு செய்வதே முக்கிய நோக்கமாகும். 

இந்த விண்கலம் லெக்ராஞ்சியன் முதல் புள்ளியில் நிலை நிறுத்தப்படுவதன் மூலம் நாம் பூமியில் இருந்து சூரியனை தொடர்ந்து கண்காணிக்க முடியும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

சூரியனுக்கு விண்கலம் அனுப்புவது விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் சவாலாகவே இருந்து வருகிறது. 

குறிப்பாக பூமியில் இருந்து சூரியனின் தூரம் 149 மில்லியன் கிலோ மீட்டராக உள்ளது. ஆனால் நிலவு வெறும் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. 2 வது காரணம், சூரிய வளிமண்டலத்தில் உள்ள அதீத வெப்ப நிலையும், கதிர்வீச்சும். இந்த சவால்களை கடந்து இஸ்ரோ வரும் ஜனவரி மாதம் சாதனை படைக்கும் என இந்திய தேசமே எதிர்பார்த்து கிடக்கிறது.

பூமியை நோக்கி வரும் சூரிய புயல்களை அறிந்து கொள்ளவும், அதன் தாக்கத்தை தணிக்கவும் தொடர்ச்சியாக சூரியன் குறித்த ஆய்வுகளை இஸ்ரோ மேற்கொள்ள உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment