தென் மாகாணத்தில் 65 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பாதிப்பு : சோறு உண்பவர்கள் அறிவுபூர்வமாக தீர்மானம் எடுத்து நீரை விடுவிக்க வேண்டும் - அஜித் ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Friday, August 4, 2023

தென் மாகாணத்தில் 65 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பாதிப்பு : சோறு உண்பவர்கள் அறிவுபூர்வமாக தீர்மானம் எடுத்து நீரை விடுவிக்க வேண்டும் - அஜித் ராஜபக்ஷ

(இராஜதுரை ஹஷான்)

உடவளவ பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. மின்சாரத்தை குறுகிய காலத்துக்குள் உருவாக்க முடியும். ஆனால் நெற் பயிர்ச் செய்கைக்கு மூன்று மாதங்களேனும் செல்லும். ஆகவே சோறு உண்பவர்கள் அறிவுபூர்வமாக தீர்மானம் எடுத்து சமனல அணையில் இருந்து விவசாயத்துக்கு நீரை விடுவிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, மின்னுற்பத்திக்கு தேவையான நீரை சேமிப்பதற்காக சமனல நீர்த் தேக்கத்தில் இருந்து உடவளவ பகுதி விவசாய நிலங்களுக்கான நீர் விநியோகத்தை அரசாங்கம் தடை செய்துள்ளது. இதனால் தென் மாகாணத்தில் விவசாயத்தில் ஈடுபடும் 65 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மின்சாரத்தை ஒரு சில மணித்தியாலங்களில் உற்பத்தி செய்யலாம். ஆனால் விவசாயத்தை குறுகிய காலத்துக்குள் மேற்கொள்ள முடியாது. நெல் பயிர்ச் செய்கைக்கு குறைந்தப்பட்சம் 3 மாதங்களேனும் செல்லும்.

நீர் மின்னுற்பத்திக்காக விவசாய நிலங்களுக்கு நீர் விடுவிப்பது தடுக்கப்பட்டுள்ளமை முறையற்றதொரு செயற்பாடாகும். விவசாயத்துக்கு தேவையான நீரை விடுவிக்காமல் இருப்பதால் உடவலவ பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கின்றன. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரச்சினை குறித்து பேசப்பட்டுள்ள போதும் அதற்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.

மின்சாரத்தை எப்போதும் உற்பத்தி செய்யலாம் ஆனால் விவசாயத்தை விரும்பும் நேரத்தில் மேற்கொள்ள முடியாது. ஆகவே சோறு உண்பவர்கள் அறிவார்ந்த ரீதியில் சிந்தித்து சமனல நீர்த் தேக்கத்தில் இருந்து உடவலவ பிரதேச விவசாய நிலங்களுக்கு நீரை விடுவிக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment