யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை அதிகளவில் நுகர்ந்த குருநாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (03) உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன், யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மின் சாதன பொருட்களை விற்பனை செய்து வந்தவர் எனவும், நேற்றையதினம் கல்வியங்காட்டு பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞன் அதிகளவில் ஹெரோயின் போதைப் பொருளை நுகர்ந்தமையே உயிரிழப்புக்கான காரணம் எனவும், மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேமகுமார் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.விசேட நிருபர்
No comments:
Post a Comment