இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ. 29 கோடி பெறுமதியான மாணிக்கக் கற்களுடன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (30) அதிகாலை 3.15 மணியளவில் AI 217 எனும் சென்னை செல்ல இருந்த விமானத்தில் குறித்த இரத்தினக் கற்களுடன், மோசடியாக நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது, விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள பணிப்பாளரும் அதன் ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
ஒருகொடவத்தையைச் சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகத்தில் ஈடுபடும் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது ஆடையில் மறைத்து வைத்திருந்த 2311.75 கிராம் நிறை கொண்ட மாணிக்கக் கற்களுடன், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரத்தினக் கற்களின் பெறுமதி ரூ. 29.1 கோடி (இருபத்தொன்பது கோடியே பத்து இலட்சம்) என சுங்கத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்களம் மேற்கொண்டு வருவதுடன், குறித்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment