பதுளை - எல்ல கொடுவல பகுதியில் போதைப் பொருள் சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எல்ல கொடுவல மீரியகெலே பகுதியில் போதைப் பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற எல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸாரை ஒருவர் கத்தியால் வெட்டியதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்து, பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஐஸ் போதைப் பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்வதற்காக எல்ல பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று (30) அதிகாலை சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
சுற்றிவளைப்பிற்கு சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையே சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
காயமடைந்தவர்கள் 38 மற்றும் 29 வயதுடைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனவும், அவர்கள் தற்போது பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் கடற்படையில் இருந்து தப்பிச் சென்றவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் போதைப் பொருள், கைக்குண்டு, கத்தி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment