மாணவர்களுக்கு வட்டியற்ற கடன் திட்டம் : விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன - News View

About Us

About Us

Breaking

Saturday, July 1, 2023

மாணவர்களுக்கு வட்டியற்ற கடன் திட்டம் : விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தின் ஏழாவது கட்டத்திற்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (04) முதல் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய 2019/2020/2021 ஆம் ஆண்டுகளில் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி அதில் சித்தியடைந்த மாணவர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான விண்ணப்பப்படிவத்தை www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும். அத்தோடு குறித்த கடன் தொடர்பான முழுமையான விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

070-3555970/79 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து மேலதிக தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment