வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, July 7, 2023

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமனம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த உமா மகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு மாகாண கல்வி அமைச்சில் நிலவும் வெற்றிடத்துக்கே பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment