(எம்.ஆர்.எம்.வசீம்)
மாணவர்களின் ஆரம்ப நிலை கல்வியின் தோல்விக்கு பிரதான காரணமாக இருப்பது பயிற்றப்படாத ஆசிரியர்களை ஆரம்பப் பிரிவுக்கு இணைத்துக் கொண்டதாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஆரம்ப நிலை கல்வியின் வெற்றி, மாணவர்களின் இரண்டம் நிலை மற்றும் உயர் கல்வியின் வெற்றிக்காக மிகவும் தீர்மானமிக்கதாக தாக்கம் செலுத்துகிறது.
கடந்த கொவிட் தொற்று காலப்பகுதியில் தவறிப்போன ஆரம்பக் கல்வி வாய்ப்பை யதார்த்தமாக்கும் இறுதிக்கட்டத்தை தற்போது தாண்டி இருக்கும் கல்வி அமைச்சு ஒட்டு மொத்த பாடசாலை கட்டமைப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்தி மாணவர்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொடுப்பதற்காக முன்னிற்கிறது.
அத்துடன் ஆசிரியர்கள் மிகவும் கவனமாகவும், அர்ப்பணிப்புடனும் செலாற்றுவதற்கு தயாராகியே ஆசிரியர்களாக கல்வித் துறையில் சேவை செய்வதற்கு இணைந்து கொள்ள வேண்டும்.
கல்வி அமைச்சர் என்ற வகையில் நாடு பூராகவும் இடம்பெறும் கல்வி தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் நாளாந்தம் கவனம் செலுத்தி அவற்றுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்குவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறேன்.
அதன பிரகாரம் ஆசிரியர் என்ற வவையில் தேவையான அறிவு, திறமை மற்றும் சிந்தனைகளை மேம்படுத்திக் கொண்டு குறித்த தகைமைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். குறித்த பயிற்சிகளின் ஊடாக மனித வளங்களை முகாமைத்துவம் செய்துகொள்வது அத்தியாவசியமான தொன்றாகும்.
அதன் மூலம் பிள்ளைகள் பாதிக்கப்படுவதை தடுத்துக் கொண்டு, 2024ஆம் ஆண்டில் கல்வி ஆக்கபூர்வமான மாற்றத்துடன் புதிய செயற்பாடுகளுடன் திருப்திகரமான கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு சர்வதேசத்தை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பத்தை எமது நாட்டு பிள்ளைகளுக்கு விரிவாக்குவது கல்வி அமைச்சின் பிரதான நோக்கமாகும்,
அத்துடன் 2024 ஆம் ஆண்டில் இருந்து 5ஆம் தர பலமைப்பரிசில் பரீட்சை உட்பட சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை உரிய காலத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments:
Post a Comment