இங்கிலாந்துக்கு சென்றார் சர்ச்சைக்குரிய போதகர் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 6, 2023

இங்கிலாந்துக்கு சென்றார் சர்ச்சைக்குரிய போதகர்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ இங்கிலாந்து சென்றுள்ளார்.

இலங்கையில் அவரின் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து பல விசாரணைகள் இடம்பெறும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து அவர் இங்கிலாந்து சென்றுள்ளார்.

அடுத்த வாரம் அவர் இங்கிலாந்தில் ஆராதனை நிகழ்வொன்றை நடத்தவுள்ளார்.

இது குறித்து சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

மதங்களுக்கு எதிரான கருத்துக்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியிருந்த நிலையில் அவர் மே மாதம் 16ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 21ஆம் திகதி அவர் நேரலை நிகழ்வொன்றில் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கோரியிருந்தார்.

தான் இலங்கைக்கு திரும்பி வருவேன் என அவர் தெரிவித்திருந்த போதிலும் அவர் திரும்பிவரவில்லை.

எனினும் அவரது பிள்ளைகள் மனைவி ஆகியோர் ஜூன் மாதம் 2ஆம் திகதி நாடு திரும்பினர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் போதகருக்கு எதிரான பயணத் தடையை குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குடிவரவு அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கைக்கு அவர் திரும்பினால் அவரை கைது செய்து சிஐடியினரிடம் ஒப்படைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment