இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காலி, பொல்கஹவெல பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடொன்றை சோதனையிட்டபோது பல இராணுவ சீருடைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.
குறித்த வீட்டிலிருந்து 3 இராணுவ சீருடைகள், 1 OG சீருடை, 1 கடற்கரை அங்கி போன்றன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் குறித்த வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்தவர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய் என்பது தெரிய வந்துள்ளது.
மீட்கப்பட்டுள்ள இராணுவச் சீருடைகள் ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment