புத்தளம் சிலாபம் கடற்கரைப் பகுதியில் அரிய வகை கடலாமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
இவ்வாறு கரையொதுங்கிய கடலாமை (Olive Redly) ஒலிவ நிற வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடலாமை 40 கிலோவிற்கும் அதிக எடை கொண்டு காணப்படுவதாக அக்கிராம மீனவர்கள் தெரிவித்தனர்.
குறித்த ஆமையின் ஓடு உடைந்த நிலையில் காணப்படுவதகவும் அக்கிராம மீனவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டில் கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்ததையடுத்து பல கடலாமைகள், டொல்பின்கள், திமிங்கிலங்கள் தொடர்ந்தும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment