ஐந்து மணி நேர விமான பயணத்தின் பின் தாயகத்தை சென்றடைந்த முத்துராஜா - News View

About Us

About Us

Breaking

Sunday, July 2, 2023

ஐந்து மணி நேர விமான பயணத்தின் பின் தாயகத்தை சென்றடைந்த முத்துராஜா

இலங்கையிலிருந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சக்சுரின் யானை நேற்று தாய்லாந்தை சென்றடைந்துள்ளது.

ஐந்து மணி நேர விமான பயணத்தின் பின்னர் யானை தாய்லாந்தின் சியாங்மாய் நகரின் விமான நிலையத்தை சென்றடைந்தது.

இலங்கையிலிருந்து முத்துராஜா யானையை ஏற்றிய ரஷ்ய விசேட சரக்கு விமானம் நேற்று (02) காலை தாய்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்தே விமானம் தாய்லாந்து நோக்கி புறப்பட்டது.

முத்துராஜா யானை 2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

அதற்கிணங்க, சுமார் 22 வருடங்களாக முத்துராஜா யானை அளுத்கம கந்தே விஹாரையின் பொறுப்பிலிருந்தது.
அழகிய தந்தங்களை கொண்ட முத்துராஜா யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அதனை மீளவும் தமது நாட்டிற்கு அழைத்துச் செல்வதாக தாய்லாந்து அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தனது தாயகத்தை சென்றடைந்த யானையை தாய்லாந்தின் இயற்கை வள சூழல் விவகார அமைச்சர், அதிகாரிகள் மிருக வைத்தியர்கள் வரவேற்றனர்.

லம்பாங் மருத்துவமனையின் வைத்தியர்கள் யாiனையை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் யானை 30 நாள் தனிமைப்படுத்தலிற்காக யானை காப்பகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

விமான நிலையத்தில் யானையை பார்ப்பதற்காக பெருமளவு சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் திரண்டிருந்தனர்.

யானை பாதுகாப்பாக வருவதற்கான தார்மீக ஆதரவை வழங்குவதற்காக தான் வந்ததாக சுற்றுலாப்பயணியொருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment