ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (05) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண ஆளுநர் இதனை உறுதிப்படுத்தினார்.
சீரற்ற வானிலையினால் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பிலான விசேட சுற்றுநிரூபம் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடித்தால் அடுத்தடுத்த நாட்களில் பாடசாலைகளை தொடர்வதா அல்லது விடுமுறை வழங்குவதா என மாகாணக் கல்வி செயலாளர் அறிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment