நாட்டு மக்களுக்கு உண்மைத் தன்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் : பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைப்போம் என்கிறார் சன்ன ஜயசுமன - News View

About Us

About Us

Breaking

Friday, July 14, 2023

நாட்டு மக்களுக்கு உண்மைத் தன்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் : பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைப்போம் என்கிறார் சன்ன ஜயசுமன

(இராஜதுரை ஹஷான்)

மருந்து இறக்குமதி விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளின் உண்மைத் தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இது அலட்சியப்படுத்தும் விடயமல்ல, தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானித்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, அவசர மருந்து கொள்வனவை தொடர்ந்து சுகாதாரத்துறை பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. சுகாதார சேவைகள் குறித்து மக்கள் மத்தியில் காணப்படும் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது மாறுபட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பயன்பாடு தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் துறையின் அதிகாரிகள் குறிப்பிடும் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது.

மருந்து இறக்குமதி விவகாரத்தில் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளின் உண்மைத் தன்மையை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இதனை அலட்சியப்படுத்த முடியாது.

தேசிய ஒளடதங்கள்; கண்காணிப்பு அதிகார சபையை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானித்துள்ளோம்.

தேசிய ஒளடதங்கள் கண்காணிப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் முறையாக இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

அரசியல் பரிந்துரைகளுடன் முக்கிய பதவிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த தவறை முதலில் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment