குருந்தூர் மலையில் சரத் வீரசேகரவை எச்சரித்த நீதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 4, 2023

குருந்தூர் மலையில் சரத் வீரசேகரவை எச்சரித்த நீதிபதி

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா 04.07.2023 இன்றையதினம் நேரடியாக கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குருந்தூர் மலைப் பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவும் வருகை தந்திருந்தார்.

இந்நிலையில் நீதிபதி ரி.சரவணராஜா குறித்த வழக்குத் தொடர்பிலான விசாரணைகளை இரு தரப்பு சட்டத்தரணிகளுடனும் இணைந்து மேற்கொண்டிருந்தபோது இடையே குறுக்கிட்ட சரத் வீரசேகர, தன்னை அறிமுகப்படுத்தி தானும் அங்கு கருத்துத் தெரிவிக்க முற்பட்டார்.

அப்போது அவரது கருத்தினை ஏற்க மறுத்த நீதிபதி, பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இங்கு கருத்துத் தெரிவிக்க முடியாதெனவும், இங்கு நீதிமன்ற விசாரணையே இடம்பெறுவதாகவும், அங்கிருந்து சரத் வீரசேகரவினை விலகிச் செல்லுமாறும் எச்சரித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சரத் வீரசேகர அங்கிருந்து விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment