பல்கலைக்கழக மாணவர்கள் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Sunday, July 2, 2023

பல்கலைக்கழக மாணவர்கள் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஹந்தானை பிரதேசத்தில் உள்ள மலை ஒன்றில் ஏற வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குளவி கொட்டியதில் 15 மாணவிகள் மற்றும் 27 மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும், உடனடியாக அவர்கள் பொலிஸ், இராணுவம் மற்றும் பிரதேசவாசிகளினால் 1990 அம்பியூலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 276 பேரும், ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் இந்த மலைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment