இலங்கையில் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
தொற்று நோயியல் பிரிவின்படி, நேற்று வரை 49 ஆயிரத்து 559 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 10 ஆயிரத்து 879 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தில் 24 ஆயிரத்து 730 பேரும் பாதிக்கப்படுள்ளனர்.
அத்துடன், ஜூன் மாதத்தில் 9 ஆயிரத்து 916 டெங்கு தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஜனவரி 2023 க்குப் பிறகு ஒரு மாதத்திற்குள் பதிவான அதிக எண்ணிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 49,759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வார நிலவரப்படி டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
டெங்கு நோயாளர்களில் மேல் மாகாணத்தில் இருந்து 24,837 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 10,000 டெங்கு நோயாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். 61 பிரதேசங்களை டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment