ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச மக்களின் சாபம் சென்றடைய வேண்டும் - சாணக்கியன் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 2, 2023

ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச மக்களின் சாபம் சென்றடைய வேண்டும் - சாணக்கியன்

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் பிறிதொரு மோசடியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (1) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி முதலாவது மோசடி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் நாடு வங்குரோத்து நிலையை அடையும் என அறிந்தும் வெளிநாட்டு கடன் டொலரில் செலுத்தப்பட்டது. தற்போது கடன் மறுசீரமைப்பு ஊடாக மற்றுமொரு மோசடி இடம்பெறவுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் பிறிதொரு மோசடியாகும் என்றார்.

No comments:

Post a Comment