மாணவிக்கு பாலியல் சீண்டல் : ஆசிரியருக்கு விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 14, 2023

மாணவிக்கு பாலியல் சீண்டல் : ஆசிரியருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டுள்ளார். பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்டபோதும் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை. இதையடுத்து பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.

ஆசிரியர் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கைதான ஆசிரியர் ஏற்கனவே வலிகாமம் பகுதி பாடசாலையொன்றில் கல்வி கற்பிக்கும் பொழுது சில மாணவிகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வரவில்வை. இதையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment