வீட்டுத் திட்டங்களில் குடியமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு இருக்கிறதா ? : ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 3, 2023

வீட்டுத் திட்டங்களில் குடியமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு இருக்கிறதா ? : ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு

அரச வீட்டுத் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகளில் குடியமராதவர்களின் வீடுகளை திரும்பப் பெற வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இரண்டாவது கலந்துரையாடலில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

குறித்த அபிவிருத்திக் கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தில் வழங்கப்பட்ட அரச வீட்டுத் திட்டங்களில் குடியமராதவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆராயப்பட்டது.

இதன்போது யாழ். மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட வீடுகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட வீடுகளில் பயனாளிகள் வாசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பிரதேச செயலாளர்களிளால் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக சங்கானை தெல்லிப்பழை சண்டிலிப்பாய் மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேச செயலகங்களில் அதிகளவிலான வீடுகள் பயனாளிகள் இன்றி காணப்படுவதாக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அரச வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டதன் நோக்கத்தை பயனாளிகள் பூர்த்தி செய்யவில்லையாயின் அதனை மீளப் பெறுவதற்கு சுற்றுநிருபம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது, காணி வீடு இல்லாதவர்கள் அரச வீட்டுத் திட்டத்தை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களை மீளப் பெற முடியாது என சில கருத்தகள் முன்வைக்கப்படட்டன..

இதனையடுத்து கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, பலர் வீட்டுத் திட்டங்களுக்காக காத்திருக்கும் நிலையில் வழங்கிய வீட்டுத் திட்டங்களை பயன்படுத்தாதவர்களுக்கு எவ்வாறு நடவடிக்கை எடுப்பது எனக் கேள்வி எழுப்பினார்.

இதன்போது வீட்டுத் திட்டங்களை பெற்றவர்கள் தொழில் மற்றும் பிள்ளைகளின் கல்வித் தேவை கருதி பிறிதொரு இடத்தில் வாழலாம் அதற்காக அவர்களின் திட்டங்களை மீளப் பெற முடியாது. ஒருவேளை அரச வீட்டுத் திட்டங்களுக்கு மேலதிகமாக வீடு மற்றும் காணிகள் உள்ளவர்களாயின் அதனை சரிவர ஆராய்ந்து மாற்று நடவடிக்கைகளை பின்பற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டது

இந்நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் வீட்டுத் திட்டங்களில் குடி அமராதவர்களுக்கு மாற்று இடங்களில் வீடு காணிகள் இருக்கிறதா என ஆராய்ந்து விரிவான விபரங்களுடன் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment