கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் குறைகிறது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 10, 2023

கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் குறைகிறது

மொபைல் போன்களின் விலைகளை 20 வீதத்தினால் குறைப்பதற்கு மொபைல் போன் விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை நாணயத்தின் டொலருக்கு எதிரான தற்போதைய நிலையை கருத்தில் கொண்டே மொபைல் போன் விற்பனையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

டொலர் அதிகரிப்பு காரணமாக மொபைல் போன் கொள்வனவு 40 வீதத்தினால் குறைவடைந்தது என சங்கத்தின் செயலாளர் சர்மித் செனெரத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், புதிய கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு பதிலாக மக்கள் பழைய மொபைல் போன்களை திருத்தி பயன்படுத்தினர். எனினும், இலங்கை ரூபாயில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களால் மொபைல் போன்களை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டொலர் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டால் மொபைல் போன்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம்.

மொபைல் போன்களை இலங்கையில் எவரும் தயாரிப்பதில்லை என்பதால் இந்தியாவையும் சிங்கப்பூரையும் நம்பியிருக்க வேண்டியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment