இலங்கையில் 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 10, 2023

இலங்கையில் 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் நாயகம் 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி வௌியிட்டுள்ளார்.

இலத்திரனியல் உபகரணங்கள், உடற்சுகாதார பொருட்கள், உணவுப் பொருட்கள், நிர்மாண பணிகளுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட 300 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளே இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளன.

நேற்று (09) முதல் அமுலாகும் வகையில், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலர் பெறுமதி அதிகரிப்பு காரணமாக கடந்த காலங்களில் இறக்குமதிகள் தொடர்பான தடைகள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment