வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்கு எச்.ஐ.வி தொற்று - News View

About Us

About Us

Breaking

Sunday, June 11, 2023

வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்கு எச்.ஐ.வி தொற்று

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட இருவரும் ஆண்களாவர்.

வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்த 2022 டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் தீவிர தொற்றுடன் சிகிச்சைக்கு வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாதவர்கள் என்ற அடிப்படையில் 7 ஆண்களும் 5 பெண்களுமாக மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தற்போது எச்.ஐ.வி தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

வவுனியா தீபன்

No comments:

Post a Comment